விஷால் பாணியில் களத்தில் இறங்கிய வரலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல் பாணியில் விஷாலும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் கமல், விஷால் பாணியில் நடிகை வரலட்சுமியும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். 'உன்னை அறிந்தால்' என்ற டைட்டிலில் இந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரும் 14ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதுவொரு சமூக மாற்றத்திற்கான முதல் படி' என இந்நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வரலட்சுமி 'சேவ் சக்தி' என்ற அமைப்பை தொடங்கி திரையுலகில் உள்ள பெண் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக சேவை செய்து வருகிறார். அந்த வகையில் இந்த 'உன்னை அறிந்தால்' நிகழ்ச்சியும் பெண்களின் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lets stop questioning what other have done.. and lets start asking ourselves what are we doing..?! Join me on this new venture to try and be the change.. if we change so will the world #unnaiarinthal @JayaTvOfficial #jayatv #Oct14 https://t.co/1XNMUprXTF #BeTheChange #oct14 pic.twitter.com/FAr2mMWYEl
— varu sarathkumar (@varusarath) October 7, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com