நடிகைகளுக்கு பாலியல் தொல்லை குறித்து வரலட்சுமியின் தைரியமான கருத்து

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

கைநிறைய திரைப்படங்கள் ஒருபக்கம், சமூக சேவை ஒரு பக்கம், திரையுலகில் பணிபுரியும் பெண்களுக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருவது இன்னொரு பக்கம் என நடிகை வரலட்சுமி பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கோலிவுட், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து அதிர்ச்சியை அளித்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வரலட்சுமி கூறியதாவது:

திரைத்துறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை என்பது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. திரையுலகில் தீர்க்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சனையாக இந்த பிரச்சனை கருதப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாகவே திறமையுள்ள பல நடிகைகளுக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. என்னை பொருத்தவரையில் நடிகைகளுக்கு இதுவொரு மிகபெரிய சவால்தான். இந்த சவாலை எதிர்கொண்டு தான் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது' என்று கூறியுள்ளார்.

More News

மகளின் சினிமா எண்ட்ரி குறித்து கவுதமியின் விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் 'வர்மா' படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது

கமல்ஹாசனுடன் பிரிவு ஏன்? மனம் திறந்த கவுதமி

கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விரிவான விளக்கத்தை என்னுடைய பிளாக்கில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த முடிவை நான் ஒரே நாள் இரவில் எடுக்கவில்லை

முடிவுக்கு வந்தது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் மற்றும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று: தமன்னா

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது.

மீண்டும் ரிஸ்க்கான கேரக்டரில் நயன்தாரா?

பிரபலமான நடிகைகள் மாற்றுத்திறனாளி என்ற ரிஸ்க்கான வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக காது கேட்காத, வாய் பேசமுடியாத கேரக்டர்களில் நடிப்பது அபூர்வம்.