நயன்தாரா, த்ரிஷா பாணிக்கு திரும்பும் வரலட்சுமி

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

கோலிவுட் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நாயகிகள், கவர்ச்சி மற்றும் ஹீரோக்களுடன் டூயட் பாடுவதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தார்கள். இந்த பார்முலாவை உடைத்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்தது நயன்தாராவும், த்ரிஷாவும் என்று கூறலாம்.

இந்த வகையில் இவர்கள் வரிசையில் தற்போது வரலட்சுமியும் இணைந்துள்ளார். 'சென்னையில் ஒரு நாள் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான கல்பத்ரு பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வரலட்சுமியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.