நீதியின் முன் அனைவரும் சமம்: திலீப் கைது குறித்து பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தின் அடிப்படையான வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்சம்பவத்திற்கு மூளையாக இருந்தது திலீப்தான் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள திரையுலகின் தாதாவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் திலீப் கைது நடவடிக்கை, சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு சான்று என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரைத்துறை பெண்களின் பாதுகாப்புக்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகை வரலட்சுமி இதுகுறித்து கருத்து கூறும்போது, ''இந்த விவகாரத்தில் உண்மையாகவே நடிகர் திலீப் தவறு செய்திருந்தால், கண்டிப்பாக அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆக வேண்டும். ஒரு நடிகை என்பதால்தான் இதில் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று சிலர் பேசுகிறார்கள். இந்தச் சம்பவம் , ஒரு சாதாரண குடிமகளுக்கு நடந்திருந்தாலும். காவல் துறையினர் கண்டிப்பாக துரித நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நீதியின் முன் அனைவரும் சமம். நீதி அனைவருக்கும் சமம்தான். நீதி நிலைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்று வரலட்சுமி கூறினார்

More News

ஷங்கரின் அடுத்த படத்தில் 3 வடிவேலு?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார்...

சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது...

வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி'க்கு இன்று பூஜை

ஒரு படத்தின் பூஜை போட்டவுடன் பார்ட்டி வைப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஆனால் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு வித்தியாசமாக 'பார்ட்டி'க்கு பூஜை போட்டுள்ளார். ஆம், வெங்கட்பிரபு இயக்கவுள்ள அடுத்த படமான 'பார்ட்டி' என்ற படத்திற்கு இன்று சென்னையில் பூஜை நடத்தப்பட்டது...

பிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய போலீஸ் கமிஷனரிடம் மனு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி காமெடி, விறுவிறுப்பு, கேலிக்கூத்து, சர்ச்சைகள் ஆகியவைகள் கலந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்ற&

கொடைக்கானலில் இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிலா திருமணம்

சமீபத்தில் நடைபெற்ற மணிப்பூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட சமூக சேவகி இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்...