சிஎஸ்கேவின் எதிர்பாராத தோல்வி: திரையுலக பிரபலங்களின் டுவிட்டுகள்!
- IndiaGlitz, [Sunday,April 11 2021]
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கில் பார்த்தபோது மீண்டும் சிஎஸ்கே ஃபார்முக்கு வந்துவிட்டது என்று ரசிகர்கள் குஷியில் இருந்தார்கள். குறிப்பாக சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் வானவேடிக்கையாக இருந்தது. ஆனால் சென்னை அணியின் வெற்றி கனவை டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் கலைத்து விட்டனர். இருவரும் விக்கெட் இழப்பின்றி 130 ரன்களுக்கு மேல் அடித்து விட்டதை அடுத்து சென்னை அணியின் தோல்வி உறுதியானது
இதனையடுத்து நேற்றைய சென்னை அணியின் ஆட்டம் குறித்து திரையுலக பிரபலங்கள் ஒரு சிலர் தங்களது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். தோனி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கும்போது ’சிங்கம் கர்ஜிக்கும் நேரம் வந்துவிட்டது’ என்று வரலட்சுமி சரத்குமார் பதிவு செய்தார். ஆனால் அதன் பிறகு இரண்டாவது பந்திலேயே அவர் அவுட் ஆனபோது ’இது ஒரு ஜஸ்ட் விளையாட்டு தான். டென்ஷன் அடைய வேண்டாம், சிஎஸ்கே இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்’ என்று அவர் ஆறுதலாக டுவிட்டை பதிவு செய்தார்
இதனையடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் ’சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய முதல் ஆட்டம் நன்றாகவே இருந்தது. இந்த ஐபிஎல் போட்டியில் சூப்பர் டூப்பர் ஆக சென்னை அணி விளையாடும் எனறு முதல் போட்டியில் இருந்து தெளிவாக தெரிகிறது’ என்று தனக்குத் தானே ஆறுதல் செய்து கொண்டார்
அதேபோல் நடிகர் பிரேம்ஜி சென்னை அணியின் தோல்வியை தாங்க முடியாமல் கதறி கதறி அழும் ஜிஃப் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து தனது உண்மையான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
It’s just the first game..!!! No tension.. #CSK we will get there.!!! Slow and steady wins the race..!! @ChennaiIPL
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) April 10, 2021
Thalllaaaaaaaaa @msdhoni #csk @ChennaiIPL pic.twitter.com/ac00nsLMLk
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) April 10, 2021
That’s a super first half!!! Looking forward for a super duper start for this #IPL2021 And Thank q @ChennaiIPL @georgejohn1973 @dirvenkatramani for the personalised #csk tee!!???????? #Yellove #WhistlePodu pic.twitter.com/kMNZHH5QwS
— venkat prabhu (@vp_offl) April 10, 2021
And the match went as per plan!!! Thank q @ChennaiIPL #playoffbirth confirm??
— venkat prabhu (@vp_offl) April 10, 2021
It’s ok it’s ok it’s ok pic.twitter.com/jBpIHWUaXv
— PREMGI (@Premgiamaren) April 10, 2021