பாரீஸ் நோட்ரே டேம் சர்ச் தீவிபத்து: பிரபல தமிழ் நடிகை வருத்தம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மாலை பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரில் உள்ள பழமையான நோட்ரே டேம் சர்ச்சில் ஏற்பட்ட தீவிபத்து உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சர்ச்சுக்கு ஆண்டொன்றுக்கு மதபேதமின்றி சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்து இந்த சர்ச்சின் அழகையும் பழமையையும் ரசித்து செல்வதுண்டு. அப்படிப்பட்ட சர்ச்சில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது உண்மையில் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சர்ச்சியில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்த நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
'நாம் அனைவரும் உலகின் பல அதிசயங்களை பார்த்து வளர்ந்தவர்கள். அப்படி ஒரு பேரதிசயம் தான் நோட்ரே டேம் சர்ச். என்ன ஒரு அழகான வடிவமைப்புள்ள கட்டிடம் அது. பிரான்ஸ் நாட்டின் மிக முக்கியமான இடங்களில் ஒன்று. இப்படி ஒரு இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து கேள்விப்பட்டவுடன் மிகவும் துயரமடைந்தேன். அதே நேரத்தில் இந்த தீ விபத்தில் ஒருவருக்கும் காயமில்லை என்ற செய்தி ஒரு ஆறுதலாக இருந்தது' என்று நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
We have all grown up wondering if we would ever see the #NotreDame some fortunate have seen the beauty that she is..we all know what a landmark she is for France.. elegance personified..extremely sad to hear about the #NotreDamefire..God bless them and hopefully no one was hurt.. pic.twitter.com/mhTPz0oZ0f
— varalaxmi sarathkumar (@varusarath) April 16, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com