close
Choose your channels

நிஜக்கத்தி, டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சி: அசத்தும் பிரபல நடிகை

Saturday, March 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு விஜய்யின் 'சர்கார்', விஷாலின் 'சண்டக்கோழி 2' தனுஷின் 'மாரி 2' உள்பட பல படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய நடிகை வரலட்சுமி இந்த ஆண்டு 8 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் இந்த ஆண்டே அனைத்து படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி 'ராஜபார்வை' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்த வரலட்சுமி உண்மையான கத்தியை சுழற்றி பயிற்சி செய்து டூப் இன்றி நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது 'பெண்களால் சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியாது என்று யார் கூறியது? தகுந்த பயிற்சி பெற்றால் பெண்களும் சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தலாம் என்றும், தனக்கு பயிற்சி அளித்த படக்குழுவினர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்வையற்றப் பெண்ணாக வரலட்சுமி நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் ஜேகே இயக்கி வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment