நிஜக்கத்தி, டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சி: அசத்தும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,March 09 2019]

கடந்த ஆண்டு விஜய்யின் 'சர்கார்', விஷாலின் 'சண்டக்கோழி 2' தனுஷின் 'மாரி 2' உள்பட பல படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய நடிகை வரலட்சுமி இந்த ஆண்டு 8 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால் இந்த ஆண்டே அனைத்து படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வரலட்சுமி 'ராஜபார்வை' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்த வரலட்சுமி உண்மையான கத்தியை சுழற்றி பயிற்சி செய்து டூப் இன்றி நடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது 'பெண்களால் சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியாது என்று யார் கூறியது? தகுந்த பயிற்சி பெற்றால் பெண்களும் சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தலாம் என்றும், தனக்கு பயிற்சி அளித்த படக்குழுவினர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பார்வையற்றப் பெண்ணாக வரலட்சுமி நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் ஜேகே இயக்கி வருகிறார்.
 

More News

'ஆட்டோக்காரன்' பாடலை பாடிய பிரபல காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆட்டோக்காரன்' பாடலை அடுத்து ஆட்டோக்காரர்களை பெருமைப்படுத்தும் பாடல் ஒன்றை காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடியுள்ளார்.

'அவெஞ்சர்ஸ்' ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்?

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் , ஹாலிவுட்டில் உருவாகவுள்ள அவெஞ்சர் வரிசையின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு

சிம்பு இதுவரை நடித்திராத கேரக்டர்: 'மஹா' இயக்குனர் பெருமிதம்

ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

நீதான் என் உலக அழகி! மகளிர் தினத்தில் நயனை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 'நானும் ரெளடிதான்' படத்தின் படப்பிடிப்பின்போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

சூர்யாவின் 'காப்பான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஆர்யா, ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் அடுத்த படத்தில்  நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.