அரசை மட்டும் குறைகூற வேண்டாம், நமக்கும் பொறுப்பு வேணும்: பிரபல தமிழ் நடிகை
- IndiaGlitz, [Friday,July 10 2020]
பிரபல நடிகையும் சேவ் சக்தி என்ற அமைப்பு மூலம் சமூக சேவை செய்து வருபவருமான நடிகை வரலட்சுமி, கொரோனா விஷயத்தில் அரசை மட்டும் குறை கூற வேண்டாம் என்றும் பொது மக்களாகிய நமக்கும் பொறுப்பு வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
நடிகை வரலட்சுமி அவ்வப்போது சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக தெரிவித்து வருவார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டிலை தனது சேவ்சக்தி அமைப்பின் மூலம் கொடுத்து உதவினார். இதற்காக வரலட்சுமி தனது சேவ்சக்தி அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் நேரடியாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தார்.
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போய் சேர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் இந்த உணவும் தண்ணீரும் அவர்களுக்கு உதவும் என்றும் தெரிவித்தார். இந்த உதவியை செய்ய அனுமதித்த சென்னை மாநகராட்சி, இந்தியன் ரயில்வே, தமிழக அரசுக்கு நன்றி என்றார்.
மேலும் கொரோனா பரவலுக்கு அரசை மட்டும் குறை கூறக்கூடாது என்றும் பொது மக்களாகிய நமக்கும் பொறுப்புணர்வு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக் கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வரலட்சுமி சரத்குமார் கேட்டுக்கொண்டார்.