இப்படி ஒரு கேவலமான கேள்வியை கேட்காதீர்கள்: பிறந்தநாள் பிரஸ்மீட்டில் வரலட்சுமி!

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இன்று தனது பிறந்தநாளை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது என்று கூறினார். மேலும் தனது திருமணம் குறித்து கேள்வி கேட்ட ஒரு செய்தியாளர்களிடம் அவர் பதில் கூறிய போது ’திருமண எப்போது என்ற கேவலமான கேள்வியை யாரிடம் கேட்க வேண்டாம்’ என்று கூறினார். 

திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமா? என்றும் அது ஒரு கொள்கையா? என்றும் ஒரு பெண் என்றால் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஒரு கொள்கையா? என்றும் பிறகு ஏன் என்னிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள் என்று எதிர்கேள்விகளை கேட்டார். ஆண்களுக்கு கொள்கை இருக்கும் போது பெண்களுக்கு மட்டும் கொள்கை இருக்கக்கூடாதா? என்றும், கல்யாணம் எப்போது என்ற கேவலமான கேள்வியை மட்டும் யாரிடமும் கேட்காதீர்கள்’ என்று வரலட்சுமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்தது.

விஜய் படத்தில் இசையமைப்பாளர் எஸ்.தமன்: ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிருத் இசை அமைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் படத்தில் பணிபுரிவேன் என பிரபல தமிழ் தெலுங்கு திரையுலகின்

தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சிறுவயது கேப்ரில்லா: வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் கடைசி கட்டத்தில் இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே

டிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்!

ஸ்பெயின் நாட்டில் டிக்டாக்கில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நபர் ஒருவர் அதில் பெரிய அளவிற்கு புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஒரு விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளார்.

3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ!

சமையல் என்பதே ஒரு சலிப்பான வேலை எனப் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது 3 வயதில் ஒரு சிறுவன் தனது விதவிதமான சமையல் குறிப்புகளால் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.