என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி: 25 படங்களில் நடித்து முடித்த பிரபல நடிகையின் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை வரலட்சுமி கடந்த 2012ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போட்டி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய், விஷால், தனுஷ், சிம்பு, உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது 25 படங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதனையடுத்து தான் கடந்து வந்த பாதை குறித்து ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இது ஒரு நீளமான, கடினமானப் பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை. ஆனால் கனவுகள் கண்டிப்பாக ஒரு நாள் நிஜமாகும். எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கிறேன். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்துள்ளேன். இப்போது நான் 25 படங்களை முடித்திருக்கிறேன் என்று நினைப்பது எனக்குப் பெரிய அளவுகோலாகத் தெரிகிறது.
என்ன நடந்தாலும் என்னுடன் நின்ற, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் தான் என்னை வலிமையாக்கியது. உங்களைத் தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதம் பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்த. அன்பு காட்டிய. என்னுடன் வளர்ந்த என் அன்பார்ந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
என் மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என் அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றியென என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். என் நல்லது கெட்டதுக்கு நடுவில் என்னுடனேயே இருந்த எனது ஒப்பனைக் கலைஞர் ரமேஷ் அண்ணாவுக்கும் என் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். 25 படங்களை முடித்ததை நான் ஆசிர்வாதமாக உணர்கிறேன். என்னுடன் இருந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு என் நன்றி.
என்றும் என் பணியில் சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனது சிறந்த நடிப்பைத் தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத் தர என்னை அர்ப்பணிப்பேன். தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும். தொடர்ந்து கனவு காணுங்கள். உங்களால் முடிந்த அத்தனை அன்பையும். மகிழ்ச்சியையும் பரப்புங்கள்.
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Thank you for all the love ❤️ pic.twitter.com/cm5I9f74wv
— varalaxmi sarathkumar (@varusarath) January 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments