வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர்.. 'சபரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் வெளியாகிறது. 'சபரி' படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவர் அசத்தியுள்ளார்.

மஹா மூவீஸுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா 'சபரி' படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே கையாண்டுள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார்.

More News

சிம்ம ராசிக்கு பதவி உயர்வு, செல்வ வளர்ச்சி தரும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக சிம்ம ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

கடக ராசிக்கு கஷ்டத்தை தணிக்கும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக கடக ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

மிதுன ராசிக்கு லாபம் தரும், கனவுகள் நிறைவேறும் 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக மிதுன ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை விரிவாக விளக்குகிறார்.

ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் மாற்றங்கள் நிறைந்த குரு பெயர்ச்சி பலன்கள்!

2024 மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண பயணம்: தியாகராஜனின் வாழ்க்கை வரலாறு

பிரபல நடிகர் தியாகராஜன்'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் நான் இளம் வயதில் தந்தையை இழந்த பிறகு குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்து ஒரு பிஸ்னஸ் மேன் ஆனேன்.