அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி யோகா: வரலட்சுமியின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பின்னர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, எச்சரிக்கை, சண்டைக்கோழி 2, மாரி 2, நீயா2, சர்கார் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் 6 படங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் சமந்தா நடித்துவரும் ’யசோதா’ என்ற திரைப்படத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தரத்தில் தலைகீழாகவும், அந்தரத்தில் உட்கார்ந்து கொண்டு யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வைரலாகி வருகிறது என்பது குறிக்கத்தக்கது.