சமுத்திரக்கனி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மலையாள ரீமேக் படத்தை இயக்க திட்டமிட்ட சமுத்திரக்கனி, தன்னுடைய கேரக்டருக்கு ஜெயராமையும், நாயகியாக வரலட்சுமியையும் தேர்வு செய்தார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தபோது அதில் வரலட்சுமியும் கலந்து கொண்டார்.
'ஆகாச மிட்டாய்' என்ற தலைப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக நடிகை வரலட்சுமி அறிவித்துள்ளார். ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் தன்னால் பணியாற்ற முடியாது, தன்னுடைய இந்த முடிவுக்கு ஆதரவாக இருந்த சமுத்திரக்கனி மற்றும் ஜெயராம் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரலட்சுமி குறிப்பிட்டுள்ள ஆணாதிக்கம் மற்றும் நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்கள் யாராக இருக்கும் என்று சமூக வலைத்தளத்தில் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

More News

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்ற நாசர் தலைமையிலான இளைஞர்கள் அணி, கடந்த சில மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது

முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து கருணாஸ் திடீர் நீக்கம்.

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் திருவாடனை தொகுதியின் எம்.எல்.வுமான கருணாஸ் சமீபத்தில் தனது 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு நீக்கி அதிரடி உத்தரவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சென்னை லைகா நிறுவனத்திற்கு திடீர் பாதுகாப்பு ஏன்?

லைகா நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிநடத்த திட்டமிட்டிருந்தது.

கமலின் மகாபாரத கருத்து குறித்து அக்சராஹாசன் கூறியது என்ன?

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து கமல் கூறிய பல கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு கோபத்தை வரவழைத்தது.

விஜய்சேதுபதியின் 'கவண்' ரன்னிங் டைம்

இந்த வாரம் வெள்ளியன்று வெளியாகும் இரண்டு முக்கிய படங்கள் நயன்தாராவின் 'டோரா' மற்றும் விஜய்சேதுபதியின் 'கவண்'