புதிய சங்கம். பிரபல தமிழ் நடிகை அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கிய நிலையில் இன்னும் ஒருசில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நடிகைகளுக்கு திரையுலகிலும், திரையுலகிற்கு வெளியேயும் பல்வேறு விதமான பாலியல் தொல்லைகள் ஏற்படுவதை தடுக்க நடிகைகளின் பாதுகாப்புக்கு என புதிதாக சங்கம் தொடங்கப்படும் என்று பிரபல நடிகையும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி கூறியுள்ளார். பெண்கள், நடிகைகள் பாதுகாப்பு தொடர்பாக உருவாக்கப்படும் இந்த சங்கம் உலக மகளிர் தினமான மார்ச் 8ல் தொடங்கப்படும் என்றும் இந்த சங்கம் குறித்த முழுவிபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகை வரலட்சுமி முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் தலைமை நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவரால் தனக்கு நிகழ்ந்த கசப்பான சம்பவம் ஒன்றை சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் விரிவாக விளக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.