'பீஸ்ட்' விமர்சனம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று காலை வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் வேண்டுமென்றே படு மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி விமர்சகர்களுக்கு தனது வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று ’பீஸ்ட்’ நாள். ’பீஸ்ட்’ திரைப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். விஜய், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். தளபதி விஜய்யின் எமோஷன் மிகவும் அருமையாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தை விமர்சனம் செய்யும் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த படத்தின் விமர்சனம் நல்லதோ, கெட்டதோ அதை உடனடியாக வெளியிட வேண்டாம். ரசிகர்களை ஒரு நாள் அல்லது இரண்டு நாள் படம் பார்த்து அனுமதித்து அவர்கள் மகிழ்ச்சி அடைய அனுமதியுங்கள். அதன்பிறகு விமர்சனம் வெளியிடலாம்’ என்று கூறியுள்ளார்.