பள்ளி குழந்தைகளுக்கு வரலட்சுமி கொடுத்த இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்று கூறுவதுண்டு. அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பள்ளிக்குழந்தைகளை சந்தோஷப்படுத்தி சந்தோஷம் அடைந்துள்ளார்.

நடிகை வரலட்சுமி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது பள்ளி குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தி அவர்கள் அனைவரையும் தன்னுடைய காரில் ஏற்றி கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு காரிலேயே அழைத்து சென்றுள்ளார். அப்போதுதான் அந்த பள்ளி குழந்தைகள் தினமும் 7 கிமீ நடந்தே பள்ளிக்கு செல்வது அவருக்கு தெரிந்துள்ளது.

வரலட்சுமி தன்னுடைய காரில் குழந்தைகளை ஏற்றியவுடன் அவர்கள் அனைவரின் முகத்திலும் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து மனம் நெகிழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். வரலட்சுமியின் இந்த உதவியை சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.

More News

இவர்தான் கேப்டன் விஜயகாந்தின் மருமகளா?

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் 'சகாப்தம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும்

'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு எதிராக 'பீட்டா': திரையுலகினர் ஆவேசம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்கில் கண்டு ரசித்து வருகின்றனர்

'ஜோக்கர்' குருசோமந்தரம் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் குருசோமசுந்தரம் நடித்த 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தேசிய விருதினையும் பெற்றது

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் 3வது முறையாக இணையும் நலன் குமாரசாமி

இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் ஆகிய பரிணாமங்களில் கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வருபவர் நலன்குமாரசாமி. இவர் இயக்கிய 'சூது கவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்

'விஸ்வரூபம் 2' படத்தின் ஆச்சரியமான ரன்னிங் டைம்

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு மிகப்பெரிய தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது