அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா? நீ யாருன்னு காட்டு: பிரபல தமிழ் நடிகையின் வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியல்வாதிகளை செஞ்சிடுவோமா?, ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு’ என தமிழ் நடிகை ஒருவர் வீடியோவில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை காலை 7 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் நாளை அனைத்து தரப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என்றும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரையுலகினர் தங்களது சமூக வலை தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே
அந்த வகையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட, நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் என்று யோசிக்கவேண்டும். இதை கொஞ்சம் மாற்றி கொள்வோம், அரசியல்வாதிகள் நமக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட நாம் அரசியல்வாதிகளுக்கு நாம என்ன செஞ்சோம்ன்னு சொல்லணும். செஞ்சிடுவோமா? ஒருநாள், ஒரு ஓட்டு, நீ யாருன்னு காட்டு’ என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
Be the change you wanna see.. one day to make a difference..#vote it's your right.. #april6th #VoteChennai pic.twitter.com/ez2wvcb0hf
— ?????????????????? ?????????????????????? (@varusarath5) April 5, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments