வரலட்சுமி படப்பிடிப்பில் விபத்து: வேடிக்கை பார்த்த தாயும் மகளும் பலி!

  • IndiaGlitz, [Saturday,March 30 2019]

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் கன்னட திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆக்சன் கிங் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா என்பவர் நாயகனாக நடித்து வரும் 'ரணம்' என்ற படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு அருகேவுள்ள பாகலூரு என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சி ஒன்று ஷெல் கேஸ் கம்பெனி அருகே நடைபெற்று வந்தபோது படப்பிடிப்பை பலர் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் ஒரு ஆக்சன் காட்சியில் காரை வெடிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ உருவாக்க வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தது சிதறியது. இந்த விபத்தில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு பெண்ணும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகினர்

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெங்களூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பலியான இரண்டு பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

More News

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்: வெற்றிமாறன் உள்பட 100 இயக்குனர்கள் கூட்டறிக்கை

ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நாடு முழுவதிலும் உள்ள 100 இயக்குனர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஐடி ரெய்டு குறித்து துரைமுருகன்

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் நேற்று நள்ளிரவு சோதனை நடத்த வந்தனர்

சிவகார்த்திகேயனின் 18வது படத்தை இயக்கும் இயக்குனர்!

சிவகார்த்திகேயன் தயாரித்த முதல் படமான 'கனா' திரைப்படம் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜாவுக்காகவே தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினகரனுக்கு கிடைக்காதது நிர்மலாதேவியின் வக்கீலுக்கு கிடைத்துவிட்டதே!

ஆர்.கே.நகரில் இரட்டை இலை மற்றும் உதயசூரியனை வீழ்த்திய ராசியான குக்கர் சின்னத்தை பெற டிடிவி தினகரன் சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தினார்.

அன்னை சோனியா காந்தி பிரதமரா! நீங்களுமா ஸ்டாலின்?

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசிலர் வாய்தவறி தவறான தகவல்களை அளித்து வருவதும், தலைவர்கள் பேசும் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் .