'தளபதி 62' படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் என்ன? புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தில் சமிபத்தில் நடிகை வரலட்சுமி இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ஒரு சிறிய பகுதி என்றும் இருப்பினும் முக்கியமான கேரக்டர் என்றும், முதல்முறையாக விஜய்க்கு ஒரு பெண் வில்லி என்றும் ஏராளமான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்திகளுக்கு நடிகை வரலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பதில் கூறியுள்ளார். முதலில் இந்த படத்தில் தனக்கு சிறிய கேரக்டர் என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் தான் நடிப்பதாக தெரிவித்தார். மேலும் தான் இந்த படத்தில் வில்லி என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். மேலும் தன்னுடைய கேரக்டர் ஆடியன்ஸ்களுக்கு ஒரு சர்ப்பரைஸாக இருக்கும் என்றும் இதற்கு மேல் என்னுடைய கேரக்டர் குறித்து இப்போது சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.

முதல்முறையாக தனக்கு ரொம்ப பிடித்த நடிகராக விஜய்யுடன் இணைந்திருப்பதில் தனக்கு சந்தோஷம் என்றும், இந்த படத்தில் தன்னுடைய பகுதியின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் படமாக்கப்படவுள்ளதாகவும் வரலட்சுமி மேலும் கூறியுள்ளார்.

More News

அஸ்வினி கொலை செய்யப்பட்டது ஏன்? சினிமாவை மிஞ்சும் திடுக்கிடும் திருப்பம்?

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மீனாட்சி கல்லூரி அருகே அக்கல்லூரியில் பிகாம் படித்து வந்த அஸ்வினி என்ற மாணவியை அழகேசன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும்

மகளிர் தினம் கொண்டாட நாம் தகுதியானவர்கள்தானா?

நேற்று உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூன்று மாத கர்ப்பிணியை காவு கொடுத்துவிட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் இருந்தனர்.

ஓவியாவை எனக்கு ஏன் பிடிக்கும்? ஆரவ் சொன்ன அற்புதமான காரணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலமாகி தற்போது அதில் பலர் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் பிசியாக உள்ளனர்.

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியது ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினை இளைஞர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

பயணி தவறவிட்ட ரூ.15 ஆயிரம் : ஆட்டோ டிரைவர் என்ன செய்தார் தெரியுமா?

ஆட்டோவில் தவறவிட்ட பொருள் திரும்ப கிடைப்பது என்பது அரிதிலும் அரிதாகி வரும் நிலையில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை காவல்துறையினர்களிடம் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர் ஒருவர் குறித்த செய்தி