நடிகை வரலட்சுமியின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி. அதன் பின்னர் அவர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ விஜய் நடித்த ’சர்க்கார்’ தனுஷ் நடித்த ’மாரி 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது அவரும் சுமார் அரை டஜன் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'V3’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அமுதவாணன் இயக்கத்தில் அலென் செபாஸ்டின் இசையில் உருவாகி வரும் இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to Unveil the Title & First Look of the movie #V3
— Jayam Ravi (@actor_jayamravi) December 17, 2022
Wish you all a grand success.
All the Best Team.@varusarath5@estheranil_ @Amudhavananoffl @teamaventures @paatukaaran @inagseditor @TamilStylist@teamaimpr pic.twitter.com/AZ6bAzwIiR
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com