கமல்ஹாசனின் டைட்டிலை பெற்ற வரலட்சுமி

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

கோலிவுட் திரையுலகில் தற்போது பிசியான நடிகையாக மட்டுமின்றி ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகையாகவும் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.

இவர் தற்போது தளபதி விஜய்யுடன் 'சர்கார்', விஷாலுடன் 'சண்டக்கோழி 2' மற்றும் 'கன்னிராசி, 'வெல்வெட் நகரம்',, 'அம்மாயி', 'நீயா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வரலட்சுமி நடிக்கும் இன்னொரு படத்தை இயக்குனர் ஜேகே இயக்கவுள்ளார். கண்பார்வையற்றவராக வரலட்சுமி நடிக்கவுள்ள இந்த படத்திற்கு கமல்ஹாசன் பார்வைத்திறன் இல்லாதவராக நடித்த 'ராஜபார்வை' என்ற டைட்டிலை வைக்க படக்குழு விரும்பியது.

இதனையடுத்து கமல்ஹாசனிடம் முறைப்படி இந்த டைட்டிலை பெற்று தற்போது 'ராஜபார்வை' என்ற டைட்டிலை படக்குழு உறுதி செய்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.