முதல் முறையாக வெளியான வரலட்சுமி திருமண புகைப்படங்கள்.. மணமக்களின் காஸ்ட்யூம் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமண புகைப்படங்கள் முதல் முறையாக தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை வரலட்சுமி மற்றும் மும்பை தொழிலதிபர் நிக்கோலே சச்தேவ் ஆகிய இருவருக்கும் ஜூலை மூன்றாம் தேதி திருமணம் நடந்தது என்பது தெரிந்தது. இந்த திருமணம் தாய்லாந்தில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் திருமணம் குறித்த எந்தவிதமான புகைப்படமும் வெளியே வரவில்லை என்பதும் சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் தான் நடைபெற்றது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
திருமணத்தில் மணமக்களான நிக்கோலே சச்தேவ் வேட்டி சட்டை மற்றும் வரலட்சுமி சேலையில் என தமிழ் கலாச்சாரத்துடன் கூடிய காஸ்ட்யூம் அணிந்து திருமணத்தை நடத்தி உள்ளார்கள் என்பது புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது வரலட்சுமி மற்றும் சச்தேவ் குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments