பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இணைந்த வரலட்சுமி!

  • IndiaGlitz, [Friday,June 11 2021]

பிரபல தெலுங்கு நடிகர் என்டிஆர் பாலகிருஷ்ணா இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்டிஆர் பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை வரலட்சுமி இயக்குனர் கோபிசந்த் இயக்கிய ’க்ராக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்திலும் வரலட்சுமி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்டிஆர் பாலகிருஷ்ணா படத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நடிகை வரலட்சுமி ஏற்கனவே தமிழில் ‘காட்டேறி, பாம்பன், பிறந்தாய் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.