'நீயா 2' படத்தில் பாம்பு வேடத்தில் நடிக்கும் நடிகை யார்?

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படமான “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். 39 வருடங்களுக்கு பின் அதே பெயரில் “நீயா2” படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது . கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. என்று இந்த படத்தின் இயக்குநர் L.சுரேஷ் கூறியுள்ளார்

நீயா' படத்தில் ஸ்ரீப்ரியா பாம்பு கேரக்டரில் நடித்திருந்தது போல் இந்த படத்தில் ராஜநாகம் கேரக்டரில் வரலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராய்லட்சுமி, கேதரின் தெரஸா ஆகிய இரண்டு நாயகிகளும் இந்த படத்தில் உண்டு. இரண்டுவித வித்தியாசமான தோற்றத்தில் ஜெய் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது. தொடர்ந்து , தலக்கோணம் , சென்னை , மதுரை , கொடைக்கானல் , சாலக்குடி பகுதிகளில் நடைபெறும். அழுத்தமான காதல் கதையுடன் காமடி கலந்த ஹாரர் படமாக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ராஜவேல் மோகன் ஒளிப்பதிவும், செளமி கிருஷ்ணன் படத்தொகுப்பும் செய்கின்றனர்,.

இந்த படம் குறித்து இயக்குனர் சுரேஷ் மேலும் கூறியபோது 'பாம்பு முக்கிய அங்கம் வகிக்கும் இந்த படத்தில். 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா , தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பாங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு , உடல்மொழி , தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும்  தெரிந்து கொண்டோம். படம் முழுக்க பாம்பு வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமைந்துள்ளது.

More News

சன்னிலியோன் கணவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது அவரது கணவர் டேனியல் வெபர் என்பவருடன் வசித்து வருகிறார்

3 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய 'டன்கர்க்' படத்தின் கதை இதுதான்

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் படம் என்றாலே ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறுவதோடு வசூலையும் வாரி குவிக்கும் என்பது தெரிந்ததே.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'லேடி பேர்ட்' படத்திற்கு விருது இல்லை: ரசிகர்கள் அதிர்ச்சி

இன்று நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல விருதுகளை வென்று குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் 'லேடி பேர்ட்'.

அர்ஜூன் ரெட்டி' நாயகனுடன் ஜோடி போடும் சுசீந்திரன் பட நாயகி

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'அர்ஜூன் ரெட்டி'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சீயான் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிறார்

4 ஆஸ்காரை வென்ற தி ஷேப் ஆப் வாட்டர்’: மற்ற விருதுகள் யாருக்கு?

இன்று காலை முதல் நடைபெற்று வரும் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி ஷேப் ஆப் வாட்டர்’ என்ற திரைப்படம் இதுவரை நான்கு விருதுகளை வென்றுள்ளது.