தளபதி 62' படத்தில் திடீரென இணைந்த வரலட்சுமி

  • IndiaGlitz, [Sunday,March 04 2018]

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அபாரமான நடிப்பை  வெளிப்படுத்தியிருந்த நடிகை வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தன

தற்போது அவர் விஷாலின் 'சண்டக்கோழி 2', தனுஷின் 'மாரி 2', விமலின் 'கன்னிராசி', கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிக்கும் 'Mr.சந்திரமெளலி, தந்தை சரத்குமாருடன் 'பாம்பன்' உள்பட பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 62' படத்திலும் வரலட்சுமி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் நாயகியாக நடித்து வரும் நிலையில் வரலட்சுமியும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் வரலட்சுமியின் கேரக்டர் என்ன என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தாலும் வெகுவிரைவில் இந்த கேரக்டர் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்

நேரம், வாயை மூடி பேசவும், சூது கவ்வும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ரமேஷ் திலக்.

ரஜினி-ஷங்கருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரித்துள்ளது.

தியேட்டர் ரிலீசுக்கு முன்பே டிவியில் வெளியாகும் ஜோதிகா படம்

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஒருசில மாதங்கள் கழித்து டிவியில் ஒளிபரப்புவது வழக்கம். ஆனால் 'மகளிர் மட்டும்' திரைப்படம் தற்போது “மாயா வர்ணங்கள்” என்ற பெயரில் மலையாளத்தில் டப் செய்யப்பட்டுள்ளது

உளவியல் அரசியல் பேசும் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்

'கபாலி', காலா' படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வரும் படம் 'பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம் அவர்களின் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ்,