வரலட்சுமியின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Thursday,November 22 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சமீபத்தில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த 'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'வெல்வெட் நகரம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் ஆகவுள்ளதாக வரலட்சுமி அறிவித்துள்ளார். மேலும் இந்த டிரைலரை ஒரு பிரபலம் வெளியிடவுள்ளதாகவும் அதுகுறித்த தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் வரலட்சுமி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்து வரும் 'வெல்வெட் நகரம்' படத்தை மனோஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.