வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,February 16 2020]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி தற்போது சுமார் ஒன்பது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படம் 'வெல்வெட் நகரம்'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் 'வெல்வெட் நகரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்துவிட்டதால் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மார்ச் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்து வரும் 'வெல்வெட் நகரம்' படத்தை மனோஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.