வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடும் வரலட்சுமி: நெகிழ்ச்சியான வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு திண்டாடி வருகின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் வாயில்லா ஜீவன்களான நாய் போன்ற விலங்குகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. நாய், மாடு உள்பட வீட்டு விலங்குகள் சாப்பாடு இன்றி வாடி வதங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை வரலட்சுமி ’மனிதர்களுக்கு மட்டுமின்றி முடிந்தால் நாய்களுக்கும் உணவு வைத்து உதவி செய்யுங்கள் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி அவரே விலங்குகளுக்கு தேவையான உணவுகளை வரவழைக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளார்
விலங்குகள் நல அமைப்புகளிடம் தொடர்பு கொண்டு தெருநாய்களுக்கு தேவையான உணவுகளை வரவழைத்து அவர் தனது கையாலே நாய்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் நாய்களுக்கு தேவையான உணவுகளை சப்ளை செய்த அனைத்து அமைப்புகளுக்கும் வரலட்சுமி தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கொடுமையான கொரோனா நேரத்தில் மனிதர்களை மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து முடிந்த அளவு காப்பாற்றும் வரலட்சுமியின் சேவை நிச்சயம் பாராட்டுதலுக்குரியது
All I can say is a big thank you on behalf of our voicless street pets..thank you so much @Pedigree_India @SBWHealth #marsindia for supplying us pet food..n to the amazing souls working towards feeding them thank u so much..@arun_8778 #chitra #uma #Dr.Rakesh #nitesh n many more pic.twitter.com/Sz5q7WoO3h
— ?????????????????? ?????????????????????? (@varusarath) April 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments