போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் வரலட்சுமிக்கு தொடர்பா? அவரே அளித்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்துள்ள நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி போதை பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பதாக கூறப்படுவதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு துறைமுகம் ஒன்றில் 300 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஆதி லிங்கம் என்ற நபரும் ஒருவர் என்பதும் இவர் நடிகை வரலட்சுமியிடம் மேலாளராக பணி புரிந்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமிக்கு தொடர்பா? என விசாரணை செய்ய என்.ஐ.ஏ அவருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை வரலட்சுமி மறுத்துள்ளார். எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தவறான செய்தி, இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை, இந்த கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஆதிலிங்கம் என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னிடம் ப்ரீலான்ஸ் மேனேஜராக பணிபுரிந்தார், அதை தவிர அவருக்கும் எனக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிரபலங்களிடம் டிரைவர், மேனேஜர் போன்ற பணிகளை செய்து வரும் நபர்கள், பிரபலங்களின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக விரோத குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் பிரபலங்கள் தங்கள் மேலாளரை பணியில் அமர்த்தும் முன் அவர்கள் குறித்த பின்னணியை விசாரித்து பணியில் அமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இரவு 2 மணிக்கு சரத் குமார் சரணடைந்ததின் பின்னணி..😆😆#போதை_கம்பெனி_பாஜக pic.twitter.com/GHtrmADIec
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) March 13, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments