ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? திருமணம் குறித்து வரலட்சுமி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வரலட்சுமி திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததே. ஏற்கனவே விஷாலை வரலட்சுமி திருமணம் செய்யப் போவதாக கடந்த சில ஆண்டுகளாக வதந்திகள் கிளம்பி அதன்பின் விஷாலுக்கும் அனிஷா ரெட்டி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த உடன் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும் இந்த காதலுக்கு இரு குடும்பத்தினர்களும் சம்மதம் தெரிவித்ததாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது
இது குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமண விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது என்பது தெரியவில்லை. அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லோரும் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எனக்குத் திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி நின்று இதைப் பற்றி எழுதும் அனைத்து ஊடகங்களுக்கும் அறிவிப்பேன். எனக்குத் திருமணமும் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவும் இல்லை’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து வரலட்சுமியின் காதல் செய்தி, வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Why am i the last to know that I'm getting married..??Hahahah the same nonsense rumors..why is everybody obsessed with me getting married..if I'm getting married I will shout it off the roof tops..to all u media ppl writing abt this..IM NOT GETTING MARRIED. IM NOT QUITTING FILMS pic.twitter.com/VimowM2pMR
— ?????????????????? ?????????????????????? (@varusarath) May 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments