கொடைக்கானல் மலையில் வரலட்சுமி செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,April 08 2022]

கொடைக்கானல் மலையில் நடிகை வரலட்சுமி தனது பட குழுவினருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது

தமிழ், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ’யசோதா’. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் வரலட்சுமி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்ததும் கொடைக்கானலை விட்டு பிரிய மனமின்றி திரும்புவதாகவும் கடைசியாக ஒருமுறை கொடைக்கானலில் தனது படக்குழுவினருடன் நடனம் ஆடியதாகவும் கூறி நடன வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிரமைல் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹரிஷங்கர் மற்றும் ஹரி நாராயண் ஆகியோர் இயக்கி வரும் இந்த படத்தில் சமந்தா, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிஷர்மா இசையில் உருவான இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.