'விஸ்வரூபம் 2' படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இன்று தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட விமர்சனங்கள் இணையதளங்களில் பாசிட்டிவ் ஆக வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஒரு மனிதர் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர், அதிர்ஷ்டத்தை நம்பாதவர், தன்னுடைய முயற்சியால் அதிர்ஷ்டத்தை உருவாக்குபவர் என்றால் அவர் கமல்ஹாசன் மட்டுமே. அவருடைய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் சூப்பர். விஸ்வரூபம் 2' படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக நடிகர் சரத்குமார் விமர்சனம் செய்து கொண்டு வரும் நிலையில் அவருடைய மகள் வரலட்சுமி, கமல்ஹாசன் படத்தை புகழ்ந்துள்ளதை நெட்டிசன்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்,.
To the man who is master of all... doesn’t need luck.. he makes his own luck @ikamalhaasan sir... I’m sure #vishwaroopam2 is gonnnaaaaaa be awesommmmmnn.... alll the very best to the entire team..!!!
— varu sarathkumar (@varusarath) August 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments