close
Choose your channels

எனது திருமணம் எப்போது? வரலட்சுமி விளக்கம்

Wednesday, August 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் தனது திருமண தேதி 2018ஆம் வருடம் பொங்கல் தினம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். ஆனால் ஒருசில ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் விஷாலுடன் வரலட்சுமிக்கு திருமணம் என்று கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன.
இந்நிலையில் வரலட்சுமி தனது திருமணம் குறித்த விளக்கம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது திருமணம் இப்போதைக்கு இல்லை. நான் என்னுடைய வேலையைத்தான் இப்போதைக்கு திருமணம் செய்துள்ளேன். தயவு செய்து எனது திருமணம் குறித்து பொய்யான செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள். இது பத்திரிகை தர்மம் அல்ல' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வரலட்சுமியின் இந்த விளக்கம், அவருடைய திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் வரலட்சுமி தற்போது அர்ஜூன் நடிக்கும் 'நிபுணன்' படத்திலும், வினய் நடிக்கும் 'அம்மாயி' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment