'லவ் யூ', ரியல் ஹீரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி ’லவ் யூ’ என்று கூறி தனது ரியல் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. ‘போடா போடி’ வெற்றிக்குப் பின் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் இப்போதும் அவர் சுமார் பத்து படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரலட்சுமியின் தந்தையும் நடிகருமான சரத்குமார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவருக்கு வரலட்சுமி பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உங்களிடம் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் வளரவே இல்லை. வயது என்பது வெறும் எண் தான், அதை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள். நீங்கள் எனக்கு மட்டுமல்ல உங்களைச் சுற்றி உள்ள பலருக்கும் உத்வேகமாக இருக்கிறீர்கள். ஒழுக்கம் விடாமுயற்சி தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சிறப்பாக உங்களை வைத்துள்ளது.
நீங்கள் எதை விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைக்கும் என்ற கடவுளின் ஆசிர்வாதம் உள்ளது. லவ் யூ டாடி, என்னுடைய இன்ஸ்பிரேஷனாகவும், ரியல் ஹீரோவாகவும் இருப்பதற்கு நன்றி! அருமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா! என்று பதிவு செய்துள்ளார். வரலட்சுமியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout