தூக்கில் போடுங்கள்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 கயவர்கள் குறித்து பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டிகள் உள்பட மொத்தம் 22 பேர் 12 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சுமார் 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த மிருகத்தனமான செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இந்த 22 மிருக மனிதர்களில் 18 பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் 4 பேர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒருசிறுமியை இத்தனை மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரபல அரசியல்வாதிகள் உள்பட அனைவரும் கூறி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது கடுமையான ஆத்திரத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளிப்படுத்தியுள்ளார்

'இந்த செய்தியை கேட்டு என் வயிறு கலங்குகிறது. இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முடிவே கிடையாதா? பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மைனராக இருந்தாலும் மேஜராக இருந்தாலும் தூக்கில் போடுங்கள். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும். பல இளம் உயிர்கள் இதுபோன்ற அரக்கர்களால் பறிக்கப்படுகிறது. மாற்றத்திற்கான நேரம் இது' என்று கூறியுள்ளார்.