சாத்தான்குளம் விவகாரம் குறித்து கருத்து கூறிய இரண்டு முன்னணி தமிழ் நடிகைகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் விசாரணையின்போது மர்மமான முறையில் மரணம் அடைந்தது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்டு கொலைக்கு இணையாக இந்த மரணங்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே பல கோலிவுட் திரையுலகினர் தங்களது ஆவேசமான கருத்துக்களை பகிர்ந்துள்ள நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘சாத்தான்குளம் காவல் துறையினரின் நடத்தையைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். அதே நேரத்தில் இந்த சம்பவத்தை வைத்து நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைகூற முடியாது. ஆனால் அந்த இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சாத்தான்குளம் சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது என்றும் முழுக்க முழுக்க இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்றும் அவர்களுக்கான நீதி தாமதமானால் அநீதியானது' என்றும் கூறியுள்ளார்.
சாத்தான்குளம் விவகாரம் குறித்து பிரபல நடிகர்கள் மட்டுமின்றி பிரபல நடிகைகளும் கருத்துக்கூற தொடங்கி விட்டதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
When it's wrong..ITS WRONG...no matter who it is..extremely shocked at the behavior #Sathankulampolice There's no solace for their family..#JusticeForJeyarajAndFenix we can't blame the entire police force..those 2 frustrated sadistic men have to be punished..RIP #Jeyaraj #fenix pic.twitter.com/il78rUPNxH
— ?????????????????? ?????????????????????? (@varusarath) June 26, 2020
Sathakulam incident is horrifying.. it’s totally inhuman .. Really not acceptable.. Justice in delay is injustice #JusticeForJeyarajAndFenix ???? pic.twitter.com/UXvZPb77ec
— aishwarya rajessh (@aishu_dil) June 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments