வித்தியாசமான கேரக்டரில் முதன்முதலில் ரிஸ்க் எடுக்கும் வரலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் பார்வை திறனற்ற கேரக்டரில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நட்சத்திரங்கள் மிகவும் அரிது. குறிப்பாக நடிகைகள் இந்த கேரக்டரில் நடிக்க தயங்குவதுண்டு. 'கை கொடுக்கும் கை' படத்தில் ரேவதி, 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் சிம்ரன், 'குக்கூ' படத்தில் மாளவிகா நாயர், 'நான் கடவுள்' படத்தில் பூஜா வரிசையில் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜேகே இயக்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிப்பது சவாலானது என்றும், இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையில் மாத்யூஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
மேலும் வரலட்சுமி தற்போது' 'சண்டக்கோழி 2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'கன்னிராசி', 'வெல்வட் நகரம்', 'சர்கார்', 'மாரி 2', 'நீயா 2', 'பாம்பன்', 'சக்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com