கோலிவுட்டில் உருவாகும் இன்னொரு ஆக்சன் ஹீரோயின்

  • IndiaGlitz, [Monday,April 18 2016]

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
இந்நிலையில் 'தாரை தப்பட்டை' படத்திற்கு பின்னர் தற்போது வரலட்சுமி இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒன்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் 'நிபுணன்' படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோயினியாக நடிக்கின்றார். அதேபோல் மம்முட்டி நடிக்கும் 'கசபா' என்ற மலையாள படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.
'தாரை தப்பட்டை' போன்ற அழுத்தமான கேரக்டர்களில் ஒருபக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் அதிரடி ஆக்ஷன் படங்களில் அடித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் தனக்கு இருப்பதாக வரலட்சுமி கூறியுள்ளார். கோலிவுட்டில் இன்னொரு அதிரடி விஜயசாந்தி கூடிய விரைவில் உருவாகும் வாய்ப்பு இருக்கின்றது என்றே தெரிகிறது.

More News

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வடிவேலு வராதது ஏன்?

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்...

அழகு இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டார் ஆகமுடியாதா? ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு விளக்கம்

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால்வர்மா அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் கூறி சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தோ அல்லது அவர்களது ரசிகர்களிடம் இருந்தோ கண்டனங்கள் பெறுவது வழக்கமான ஒன்றுதான்....

6 வருட சாதனையை முறியடித்தது 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது...

பிரபல விளையாட்டு வீராங்கனைக்கு நடிகை ராதிகா வாழ்த்து

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம்தேதி வரை பிரேசில் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறவுள்ளன....

கமலுடன் 11 வருடங்கள் கழித்து இணையும் கின்னஸ் சாதனையாளர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் தொடக்கவிழா நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்.....