சுழட்டி அடித்த ஸ்டண்ட் நடிகருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் தைரியமான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. தனது கேரக்டருக்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் இவர் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'சேஸிங்'. அதிரடி சண்டைக்காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வரலட்சுமி, இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றின் படப்ப்பிடிப்பின்போது எடுத்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரியும் இந்த படத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் வரலட்சுமி தூக்கி சுழட்டி அடிக்க, கீழே விழும் வரலட்சுமி, ஸ்டண்ட் நடிகரை மடக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பலர் வரலட்சுமியை தவிர எந்த நடிகையும் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிப்பார்களா? என்பது சந்தேகமே என கமெண்ட் அளித்து வருகின்றனர். மேலும் வரலட்சுமியின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சேஸிங் படத்தில் வரலட்சுமியுடன் பாலசரவணன், யமுனா சின்னத்துரை உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கே.வீரக்குமார் என்பவர் இயக்கி வருகிறார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் தஷி இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
Girls just wanna have fun.!!!! Heheheh so much fun doing my own stunts for my movie #chasing totally worth all the hard work.. thank you #supersubbarayan master.. directed by @Veeraku94850140 dop @krishnasamy_e #shootinprogress #fightsequence #norope please don’t try this at home pic.twitter.com/3eUgLykPDt
— varalaxmi sarathkumar (@varusarath) May 29, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com