பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வரலட்சுமி செய்த உதவி!

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

கோலிவுட் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி சரத்குமார் கடந்த ஆண்டு 'சர்கார்', 'மாரி 2' உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றார். இவர் தற்போது ஏழு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மார்ச் 5ஆம் தேதி அதாவது நாளை வரலட்சுமியின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. அதேபோல் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினமும் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து வரலட்சுமியின் பிறந்த நாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா நேற்று சென்னை வைஷ்ணவா கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சென்னையில் உள்ள 35 பள்ளிகள் மற்றும் 12 கல்லூரிகளில் சானிட்டரி பேட் மிஷின்களை வரலட்சுமி வழங்கியுள்ளார். இது இந்த பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மாணவிகளுக்கு அவர் செய்த பேருதவியாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சேவ்சக்தி' என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கு நடிகை வரலட்சுமி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். திரைப்பட நடிகையாக மட்டுமின்றி சமூக சேவை சிந்தனையுடன் செயல்பட்டு வரும் வரலட்சுமிக்கு நமது அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

 

More News

'தளபதி 63' படத்தில் இணைந்த 'தெறி' பட நடிகர்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர்.

எல்.கே.ஜி வெற்றியால் இயக்குனருக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு

ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை வசனம் எழுதி நடித்த 'எல்.கே.ஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை காட்சியுடன் தொடங்கிய

விஜய்சேதுபதி தத்தெடுத்த ஆர்த்தி-ஆதித்யா யார் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திரைப்பட நடிகர் மட்டுமின்றி சமூக சேவையிலும் அக்கறை உள்ளவர் என்பது பல நிகழ்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆர்ஜே பாலாஜியின் பகுத்தறிவுக்கு காட்டமான பதில் கொடுத்த இயக்குனர்!

ஆர்.ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வெற்றிப்படமாகியுள்ள

தனுஷ்-சினேகா படத்தின் புதிய அப்டேட்!

செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' படத்தில் இணைந்து நடித்த தனுஷ்-சினேகா ஜோடி மீண்டும் 13 வருடங்கள் கழித்து துரைசெந்தில்குமார் இயக்கும் படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளதாக