என் படத்தால் கவுதமி பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? இயக்குனரின் கேள்வியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

இயக்குனர் வாராகி இயக்கிய 'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தின் டைட்டில் மாற்றப்பட வேண்டும் என்ரு சென்சார் போர்டு கூறியதை அடுத்து, இயக்குனர் வாராகி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார். ரிவைசிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ள நடிகை கவுதமியும், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்றும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிவா மற்றும் புஷ்பா கேரக்டர்கள் நிஜ வாழ்க்கையில் இருக்கும் இருவரை குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குனர் வாராகி, இந்த படத்தில் ஒரு பெண் தனது கணவனை மாற்றி கொள்ளும் கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கு முன் இதே போன்ற கேரக்டர்கள் பல படங்களில் வந்திருந்தபோதிலும் கவுதமி இந்த படத்தை எதிர்ப்பதால் இந்த படத்தை பார்த்தபின்னர் அவர் பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுவதாக அறிக்கை ஒன்றில் இயக்குனர் வாரகி தெரிவித்துள்ளார். மேலும் சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கவுதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் அரசியல் கலந்த காதல் படம் என்றும், இந்த படத்தின் கேரக்டர்கள் அனைத்தும் கற்பனையே என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.