வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு ரத்து- உயர்நீதிமன்ற மரைக்கிளை!
- IndiaGlitz, [Monday,November 01 2021]
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை தற்போது சட்டமாக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதற்கான விசாரணையில் இது அரசாணை சட்டத்திற்கு முரணாக இருக்கிறது என்றும் முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் சாதிவாரி இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் அரசு தரும் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறிய நீதிபதிகள் மாநில அரசுக்கு இதுபோன்ற சட்டம் அமைப்பதற்கு அதிகாரம் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையடுத்து வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.