மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்: வன்னி அரசு ட்விட்..!
- IndiaGlitz, [Monday,July 31 2023]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வில்லன் கேரக்டரான பகத் பாசில் கேரக்டரை பின்னணியாக வைத்து ஜாதி பெருமைகளை பேசும் பாடல்களை இணைத்து இணையதளங்களில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இந்த பாடல்கள் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வன்னி அரசு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
’மாமன்னன்’ திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள்.
அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.
இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.
அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்
#எச்சரிக்கை#மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து
— வன்னி அரசு (@VanniKural) July 31, 2023
சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள்.
வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள்.
அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை… pic.twitter.com/piN8CoVRpf