பழ வியாபாரிகளின் வண்டியை தள்ளிவிட்ட கமிஷனர்: சிலமணி நேரத்தில் நடந்த திருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா அச்சம் காரணமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் பல்வேறு தளர்வுகள் அரசால் விதிக்கப்பட்டதால் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வாணியம்பாடியில் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளிடம் வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் கடுமையாக நடந்துகொண்ட நிகழ்வுகள் சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கின்றன
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் தள்ளுவண்டி வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை தூக்கி எறிந்தும், தள்ளுவண்டியை கவிழ்த்தும் செய்த செயல்களின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாட்பாரம் மற்றும் சிறிய கடைகளில் செய்யும் இந்த அராஜகத்தை சூப்பர் மார்க்கெட்டில் செய்ய முடியுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். வியாபாரிகள் செய்தது தவறாக இருந்தாலும் அவர்களிடம் நயமாக எடுத்து சொல்லியிருக்கலாம் என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்தனர். மேலும் வாணியம்பாடி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து திடீர் திருப்பமாக சிறிது நேரத்துக்கு முன்னர் தான் செய்த தவறை உணர்ந்து வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்த வாணியம்பாடி கமிஷனர், தான் கீழே தள்ளிவிட்ட பழங்களுக்கான பணத்தையும் அவர் வியாபாரிகளிடம் வழங்கியுள்ளார். மேலும் இனிமேல் நகராட்சி விதிகளை முறையாக கடைபிடித்து வியாபாரம் செய்யுமாறும் அவர் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments