வனிதா பராக்...திருப்பூருக்கு உதயம்....! நெகிழ்ச்சியில் மக்கள்....!
- IndiaGlitz, [Thursday,June 03 2021]
திருப்பூர் மாவட்டத்தில், முதன் முதலாக பெண் ஐபிஎஸ் அதிகாரி, காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் நேற்றளவில் பல ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வளவு நாள் திருப்பூர் மாநகர கமிஷனராக பணியாற்றியவர் கார்த்திக்கேயன். இவர் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரின் இந்த இடத்திற்கு, சென்னை ரெயில்வே ஐஜியாக பணிபுரிந்து வந்த வனிதா அவர்கள், மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் சிறப்பு என்னவெனில் திருப்பூரில் பணிபுரியக்கூடிய முதல் பெண் கமிஷனரும் இவர்தான்.
யார் இந்த வனிதா...?
காவலர் வனிதா இத்துறையில் மிகவும் பிரபலமானவர், அனுபவமுள்ள சீனியர் அதிகாரியும் கூட. எந்த துறையாக இருந்தாலும், அதில் தைரியமாக நடவடிக்கைகள் எடுக்கும் வல்லமை படைத்தவர். வேலூரில் சரக டிஐஜியாக,பணியாற்றி, அதன்பின்பு சென்னை கிழக்கு மண்டல இணையராக பதவி வகித்தார். மேலும் வனிதா குறித்த சுவாரசியம் என்னவென்றால், தமிழ் ஆர்வமுள்ள இலக்கியவாதியும் கூட. பாரதியின் நூல்கள் முதல் பல நூல்களை கற்றறிந்தவர். மேடைப்பேச்சுக்களில் திறனாக பேசும் வல்லமை படைத்தவர்.
ஒரு விழாவில் வனிதா அவர்கள் பேசும்போது கூறியிருப்பதாவது, பெண் எந்த அளவிற்கு உயரத்திற்கு சென்றாலும், சமூகம் அவளுக்கு வலிகளை தந்து கொண்டே தான் இருக்கும். எத்துனை உயர் பதவிகளுக்கு சென்றாலும், பெண் போலீஸ் என்றுதான் அழைக்கிறார்கள். நாங்கள் ஆண்களை போலத்தான் வேலை செய்கிறோம். சம்பளத்திலும், பணியிலும் எந்த வித்தியாசமும் இல்லை. நாங்க போலீஸ் அவ்வளவுதான், மற்றபடி வேறுபாடுகள் இல்லை. எங்களுக்கே இந்த அளவிற்கு பிரச்சனைகள் உள்ளது என்றால், சாதாரணமாக இருக்கும் பெண்களுக்கு எத்தனை துன்பங்கள் இருக்கும். பாரதி பெண்களிடம் செருக்கு வேண்டும், என்கிறார். ஆனால் அதுபோன்ற எந்த பெண்களையும் பார்த்ததில்லை. தன்னுடைய அழகை மெருகேற்றிக்கொள்ளும் பெண்கள், தன்னுடைய பர்சினால்டியை அழகாக காண்பிக்க விரும்புவதில்லை. தன்னுடைய ஆளுமையை அவர்கள் உணர்ந்து முன்னேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
வனிதா கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருப்பூர் மாவட்ட பெண்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதால், திருப்பூர் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.