பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாய் வனிதா: அடுத்த திருமணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகருடன் திருமணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் வனிதாவின் அடுத்த திருமணமா என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார் என்பது தெரிந்ததே. அதன்பின் சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்களில் அவரையும் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜோதிடர் ஒருவருடன் வனிதா பேட்டியளித்தபோது, ‘அந்த பேட்டியில் வனிதாவுக்கு இன்னொரு திருமணம் உண்டு என்றும் வனிதாவின் வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்று ஆரம்பிக்கும் என்றும் ஜோதிடர் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் வனிதா சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து வனிதாவுக்கு அடுத்த திருமணமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி ஜோதிடர் குருஜி சொன்ன மாதிரியே இவரது பெயரும் ‘எஸ்’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படம் வனிதாவின் திருமணம் குறித்தது அல்ல என்றும், வனிதாவும் பவர்ஸ்டார் சீனுவாசனும் நடிக்கும் படத்தின் ஸ்டில் என்றும் கூறப்பட்டு வருகிறது
And...❤️❤️❤️❤️ @powerstarhere pic.twitter.com/UXKaFiNJic
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 21, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments