விக்கி - நயன் போன அதே இடத்தில் வனிதா - ஜோவிகா.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,June 02 2024]

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா, குழந்தைகள் உயிர் மற்றும் உலகுடன் சென்ற அதே இடத்தில் வனிதா விஜயகுமார் தான் எனது மகள் ஜோவிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்ட் ரெசார்ட் என்ற பகுதிக்கு விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் குழந்தைகள் உடன் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.

மேலும் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த இடத்திற்கு சிம்புவுடன் ’போடா போடி’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்ததாகவும் அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்து நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் வந்திருப்பதாகவும் அவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் அதே ஹாங்காங் டிஸ்னிலேண்ட் ரிசார்ட்க்கு வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா உடன் சென்ற புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் புரிந்து வருகிறது. அதில் ஒரு சிலர் நயன்தாரா ஃபேமிலி போன இடம் என்றும் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.