உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுகாதீங்க... வனிதா விஜயகுமார் எச்சரிக்கை!

  • IndiaGlitz, [Friday,January 20 2023]

உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க என வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் நாளை மறுநாள் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும். பொதுவான பார்வையாளர்களின் கணிப்பாக விக்ரமன் இந்த சீசனின் டைட்டில் பட்டதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரமனுக்கு வாக்காளியுங்கள் என்று பதிவு செய்திருந்தார். இந்த பதிவை பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவுக்கு ஒரு அரசியல் கட்சி தலைவர் வாக்கு கேட்பதா? என்று நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் இது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டாம் என்றும் இது பின்னாளில் தவறான உதாரணமாகிவிடும் என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து அவருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மிரட்டலுக்கு பதிலடியாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல மிரட்டல் போன்கால்கள் தனக்கு வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் யாருக்கும் எதுக்கும் பயந்தவள் நான் இல்லை, உங்கள் அரசியல் புத்தி என்னன்னு காலம் காலமா பார்த்திருக்கிறோம், நேர்மையாக மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க, உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க’ என்று பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்த பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்கள் கமெண்ட்ஸ்களாக பதிவாகி வருகின்றன.