சிங்கிள் அண்ட் அவைலபிள்: 4வது திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவியதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தான் தற்போது சிங்கிள் என்றும் அவைலபிள் என்றும் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வனிதா விஜயகுமார் ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய 2 பேரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் நான்கே மாதங்களில் அந்த திருமணமும் முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியானது
இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்த வதந்திகள் மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தற்போது அவர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் ’நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப ’என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்விட்டரில் ஆகிவருகிறது
Just to let you guys know...am very much single and available..??.. staying that way...dont spread any rumours nor believe them..
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) June 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments